×

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் காவல் நிலையங்களில் 603 துப்பாக்கி ஒப்படைப்பு

புதுக்கோட்டை : சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லைசென்சுடன் உள்ள 603 துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் உரிமையாளர்கள் ஒப்படைத்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகைளை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் லைசென்சுடன் 603 துப்பாக்கிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க துப்பாக்கிகளை உரிமையாளர்கள், அந்தெந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்து தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம் பெற்ற பிறகு பெற்று செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை உரிமையாளர்கள் ஒப்படைத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சில துப்பாக்கிகள் ஒப்படைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் மீதமுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 603 துப்பாக்கிகளையும் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்….

The post தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் காவல் நிலையங்களில் 603 துப்பாக்கி ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkoti district ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...